செய்திகள் :

"என்னைச் சிரிக்கவும், சிந்திக்கவும், ரசிக்கவும் வைத்தது" - 'மாரீசன்' படத்தைப் பாராட்டிய கமல் ஹாசன்

post image

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' திரைப்படம் வரும் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் 'மாரீசன்' படத்தை முன்கூட்டியே பார்த்த நடிகர் கமல் ஹாசன் படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.

மாரீசன்
மாரீசன்

அவர் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், "'மாரீசன்' படத்தைப் பார்த்தேன். இந்தப் படத்தில் நகைச்சுவையும், ஆழ்ந்த ஒரு விஷயமும் இணைந்திருக்கிறது. அது என்னைச் சிரிக்கவும், சிந்திக்கவும், அதன் கலையை ரசிக்கவும் வைத்தது. இந்த அற்புதமான படைப்பை வாழ்த்த படக்குழுவினருடன் ஒரு அற்புதமான உரையாடல் நடத்தினேன்.

இந்தப் படத்தில் நகைச்சுவை மட்டுமின்றி மனித உணர்வுகளைப் பற்றிய ஒரு சமூக அக்கறையுள்ள பார்வையும், நம் சமூகத்தின் இருண்ட நிழல்களை உற்று நோக்கும் ஒரு கூர்மையான பார்வையும் உள்ளன.

நான் ஒரு பார்வையாளராகவும், படைப்பாளியாகவும் இந்தப் படத்தினால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Fahadh Faasil: "எனக்குப் பிடித்த டாப் 5 படங்கள் இவைதான்" - பகத் பாசில் சொன்ன சூப்பர் லிஸ்ட்

இயக்குநர் சுதிஷ் சங்கர்இயக்கத்தில் பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'மாரீசன்'. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இலகுவான இத்திரைப்படம் இந்த வாரம் ஜூலை 25ம் தேதி வெள்ளிக்க... மேலும் பார்க்க

மாரீசன் விமர்சனம்: ஃபார்மல் டிரஸ் வடிவேலு, பக்கா திருடர் பகத் பாசில்; இந்தப் பயணம் எப்படி?

சிறுசிறு திருட்டுகள் செய்யும் திருடரான தயாளன் (பகத் பாசில்), பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து விடுதலையாகிறார். மீண்டும் திருடுவதற்காக நாகர்கோவிலுள்ள பூட்டிய வீடு ஒன்றில் நுழைய, அங்கே ஓர் அறையில் ... மேலும் பார்க்க

D54: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் தனுஷ்; பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள். வருகிற 28ம் தேதி தனுஷின் பிறந்த நாள் வருவதால், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ரெடியாகி வருகின்றனர்.தனுஷின் வளர்ச்சியில் அவரது ரசிகர்களின் பங்கு முக்கியமானது... மேலும் பார்க்க