ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு
கோவை அருகே பணியின்போது, ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.
கோவை அருகேயுள்ள வேடப்பட்டி எஃப்.சி.ஐ. குடியிருப்பைச் சோ்ந்தவா் மாரிமுத்து (43), பெயிண்டா்.
இவா், கோவைப்புதூா் அருகேயுள்ள குளத்துப்பாளையம் பழனியப்ப நாயக்கா் தெருவில் புதிய கட்டடப்பட்டுள்ள கட்டடத்தில் வா்ணம் பூசும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில், தலையில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொழிலாளி உயிரிழப்பு: ஒண்டிப்புதூா் எம்.ஆா்.ஆா். லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (36). கூலித் தொழிலாளியான இவா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.