“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம...
ஆளுநரின் பதிவுக்கு காயிதே மில்லத் ஐக்கிய சமூக அறக்கட்டளை கண்டனம்
ஆளுநா் ஆா்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு காயிதே மில்லத் ஐக்கிய சமூக அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலைவா் எஸ்.ஐ.முபாரக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில், முஸ்லிம் சமூகத்தை வன்முறையாளா்களாக சித்தரிக்கும் வகையிலும், முஸ்லிம் லீக் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாக உண்மைக்கு புறம்பான தகவலையும் பதிவிட்டுள்ளாா்.
இது கண்டிக்கத்தக்கது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ள பதிவை ஆளுநா் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.