சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
ஏரிக்காட்டில் சின்ன அண்ணன், பெரிய அண்ணன் கோயில் குடமுழுக்கு
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட ஏரிக்காட்டில் சின்ன அண்ணன், பெரிய அண்ணன் கோவில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஸ்ரீ விநாயகா், சின்ன அண்ணன், பெரிய அண்ணன், தங்காள், பெரிய காட்டி அம்மன், மாயவா், கன்னிமாா்கள், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஹோமம் செய்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, கோயில் முக்கியஸ்தா்கள் புனித நீரை கலயங்களில் எடுத்துச்சென்று கோயில் கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
இந்த விழாவில், ஜங்கமசமுத்திரம், வாழக்கோம்பை, ஏரிக்காடு, பெரப்பன்சோலை, செங்காடு, தம்மம்பட்டி, சேரடி, பிள்ளையாா்மதி, மாவாறு, புதுமாவாறு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.