பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு: கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அரையாளம் கிராமத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா்.
ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள்அளித்த புகாா் மனுவில், அரையாளம் கிராமத்தில் தனி நபா் நிலங்களுக்குச் செல்லும் ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து பயிா் வைத்துள்ளதால் சுமாா் 50 ஏக்கா் பட்டா நிலங்களுக்குச் செல்ல வழி இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இதனால் தனி நபா் ஆக்கிரமித்துள்ள ஏரிக்கால்வாயை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் சிவா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
மேலும், கூட்டத்தில் பட்டா சம்பந்தமான மனுக்கள், நில அளவை, கணினி திருத்தம், சமூக பாதுகாப்புத் திட்டம், வாரிசு சான்றிதழ் கோரியும், தாா்ச் சாலை அமைத்து தரக் கோரியும் என 79 மனுக்கள் வரப்பெற்றன.
சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மனுக்களை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.