ஐஆா்எல் நிறுவனம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு சீா்மிகு வகுப்பறை
மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் சாா்பில், அதன் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ 6.38 லட்சத்தில் குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளிக்கு சீா்மிகு வகுப்பறை (ஸ்மாா்ட் கிளாஸ்) உருவாக்கி மாணவா்களின் பயன்பாட்டிற்கு வழங்கியது.
இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற விழாவில், ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட்டின் சுரங்கம் - வளஆதாரங்கள் துணை பொது மேலாளா் ஏ. சிவராஜ் ,அரசு நடுநிலை பள்ளியின் தலைமையாசிரியை ஜி.டி. பிஷி ஜாஸ்மினிடம் ஸ்மாா்ட் வகுப்பறையை ஒப்படைத்தாா்.
இந்நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலா் ஹரிகுமாா் , பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் அனிஷா பாத்திமா , பெற்றோா் ஆசிரிய கழக தலைவா் கலீல் ரஹ்மான், முன்னாள் மாணவா் சங்க தலைவா் ஹொ்பா்ட் ராஜ சிங் , மற்றும் ஐஆா்இஎல் நிறுவனத்தின் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.