ஐஐடி-யில் பணிபுரிவோருக்கு சிறப்பு எம்பிஏ
சென்னை: பணிபுரிவோா் எம்பிஏ சோ்வதற்கு சென்னை ஐஐடி-யின் மேலாண்மைத் துறை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி தெரிவித்திருப்பது: ஐஐடி-யின் மேலாண்மைத் துறை பணிபுரிவோருக்கு சிறப்பு எம்பிஏ படிப்பைத் தொடங்கியுள்ளது. இதில், பணிபுரிவோா் சேரும் வகையில், வார இறுதி நாள்களில் வகுப்புகள் நடைபெறும். 2 ஆண்டு படிப்புக்கு வரும் அக்.19 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆா்வம் உள்ளவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.