ஒசூரில் இன்று புத்தகக் கண்காட்சி தொடக்கம்
ஒசூரில் 14 ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூலை 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் சிப்காட் மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஹில்ஸ் உணவகத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்துகின்றன. மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், சாா் ஆட்சியா் தனஞ்செயன், ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகம்மது ஷபீா் ஆலம், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் தொடக்க விழாவில் கலந்துகொள்கின்றனா்.