காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
ஒசூா் அருகே 3 வயது சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே முத்தாலி கிராமத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை ஞாயிற்றுக்கிழமை தெருநாய் கடித்துக் குதறியது.
ஒசூா் அருகே உள்ள முத்தாலி பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் - வெண்ணிலா தம்பதியின் மகன் ஹா்ஷவா்தன் (3). இந்தச் சிறுவன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் ஒன்று கணுக்கால் பகுதியில் கடித்துக் குதறியது.
இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்ட அவரது பெற்றோா் ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒசூா் பகுதியில் தொடரும் தெருநாய்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.