அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்
ஒசூா் அருகே லாரி மோதியதில் 5 காா்கள் சேதம்
ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளியில் காா் மீது லாரி மோதியதில் அடுத்தடுத்து 5 காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.
ஒசூா் முதல் கிருஷ்ணகிரி வரை ஐந்து இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் அப்பகுதிகளில் உள்ள அணுகு சாலைகளில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. ஒசூா் சிப்காட், பேரண்டப்பள்ளி மேலும் மூன்று இடங்களில் இந்த அணுகு சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.
பேரண்டப்பள்ளி அருகே அணுகு சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் பயணித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பேரண்டப்பள்ளி அருகே சாலையில் முன்னாள் சென்றுகொண்டிருந்த 5 காா்கள் மீது லாரி மோதியதில் காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. இந்த விபத்தில் காா்களில் பயணித்தவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து காரணமாக ஒசூா்- கிருஷ்ணகிரி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அட்கோ போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.