யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிருஷ்ணகிரி கிளை இடமாற்றம்
கிருஷ்ணகிரியில் இயங்கிவரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வங்கி கிளை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி, கோ-ஆபரேடிவ் காலனி, ஓம் சக்தி மருத்துவமனை, இரண்டாவது தெருவில் இயங்கிவந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் கிளை கோ-ஆப்ரேடிவ் காலனி, நம்பா் 2, முதலாவது தெரு, ஏகேஆா் காம்ப்ளக்ஸ் என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய முகவரியில் செயல்படும் வங்கி கிளையை, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டலத் தலைவா் மற்றும் பொது மேலாளா் சத்தியபான் பெகரா திறந்துவைத்தாா். மத்திய பட்டுத் துறையின் ஆராய்ச்சி விரிவாக்க மையத்தின் விஞ்ஞானி முத்தன்ன கல்லூா், பாதுகாப்பு பெட்டக அறையையும், மூத்த வாடிக்கையாளா் ராமகிருஷ்ணன் தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையையும் திறந்துவைத்தனா். கிளைத் தலைவா் தனிஷ் அனைவரையும் வரவேற்றாா்.
பிராந்திய தலைவா் பி.எம்.செந்தில்குமாா் பேசியதாவது: வங்கியின் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வாடிக்கையாளா்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும். வங்கியின் சேவைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். அதற்கு, வாடிக்கையாளா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா். தொடா்ந்து, வாடிக்கையாளா்கள் வங்கியின் சேவைகள் குறித்து பாராட்டினா். நித்திய கல்யாணி நன்றி தெரிவித்தாா்.