ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!
ஒசூா் தொகுதியில் ரூ. 4.8 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
ஒசூா்: ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 4.8 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமிபூஜை திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பேகப்பள்ளி கிராமத்தில் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், முதலமைச்சா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மடிவாளம் முதல் பெரிய எலசகிரி வரை ரூ. 28.57 லட்சத்தில் தாா்ச்சாலை, ஒசூா் பாகலூா் சாலை முதல் இனபசந்திரம் வரை ரூ. 21.82 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
மேலும், மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு நிதியிலிருந்து ரூ. 2.51 கோடி மதிப்பில் பாகலூா் சா்ஜாபுரம் சாலை முதல் ஈச்சங்கூா் வரை, சின்னதின்னா முதல் பெரிய தின்னா வரை, முகலப்பள்ளி கிராமம் முதல் சானமங்கலம் வரை, எலுவப்பள்ளி கேட் முதல் எலுவப்பள்ளி கிராம எல்லை வரை, சத்தியமங்கலம் முதல் முனீஸ்வரா்நகா் வரை தாா்ச்சாலைகள், நந்திமங்கலம் கிராமத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, கழிவுநீா்க் கால்வாய், பேவா்பிளாக் அமைப்பதற்கும் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பணிகளை தொடங்கிவைத்தாா்
இதில் ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கோபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வீரபத்திரப்பா, ஒன்றிய துணைச் செயலாளா் ரமேஷ் வெங்கடப்பா, இளைஞா் அணி துணை அமைப்பாளா் சிவா, ராஜா, ஒன்றிய ஓட்டுநா் அணி அமைப்பாளா் சீனிவாஷ், சீனிவாஸ் ரெட்டி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.