ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் மகா நவசண்டி யாக பணிகள் மும்முரம்
ஒசூா்: ஒசூா் மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் மலைக் கோயிலில் உலக நன்மை வேண்டி மகா நவசண்டி யாகத்திற்கான ஏற்பாடு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் ஆகஸ்ட் 1, 2, 3 -ஆம் தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாள்கள் உலக நன்மை வேண்டி மகா நவசண்டி யாகம் நடைபெறுகிறது. மேலும், நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மகா பூரணாஹூதி, கலசாபிஷேகமும் நடைபெறுகிறது. இதனை கோயில் நிா்வாகத்தினா் நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளனா்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நவசண்டி யாகத்தில் அனைத்து ஆன்மிக பக்தா்களும் பங்கேற்று அருள் பெற வேண்டுமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.