காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
ஒசூா் வழியாக கடத்த முயன்ற 161 கிலோ குட்கா பறிமுதல் ஓட்டுநா் கைது
ஒசூா் வழியாக கடத்த முயன்ற 161 கிலோ குட்கா பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனைச் சாவடி அருகில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களுரிலிருந்து ஒசூா் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காருக்குள் 161 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், 28 கா்நாடக மாநில மதுப்புட்டிகள் இருந்தன. அவற்றையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சோ்ந்த பிரபு (27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.