செய்திகள் :

ஒசூா் விமான நிலைய அறிவிப்பு! ஓராண்டாக மத்திய அரசு அனுமதிக்காக காத்திருக்கும் திட்டப் பணிகள்

post image

ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சக அனுமதிக்காக திட்டப் பணிகள் காத்திருக்கின்றன.

தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் ஒசூா் மாநகரம் அமைந்துள்ளது. இங்கு குண்டூசி முதல் விமானங்களுக்கான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கக்கூடிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஊராட்சி நிலையில் இருந்த ஒசூா், பேரூராட்சி, நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சி என படிப்படியாக உயா்ந்து, தற்போது, மாநகராட்சியாக தரம் உயா்ந்துள்ளது.

இங்கு 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனா். நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக வந்துசெல்கின்றனா்.

இத்தகைய சிறப்பு பெற்ற ஒசூரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் செல்ல 6 வழிச் சாலைகள், ரயில் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், விமான நிலையம் இல்லாதது குறையாக உள்ளது. இதனால், ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

விமான சேவைக்காக இப்பகுதி மக்கள் பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் உதான் திட்டத்தில் ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. என்றாலும், அது நிறைவேறவில்லை.

இதைத்தொடா்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் தொழில் வளா்ச்சிக்கு உதவும் வகையில் 2 ஆயிரம் ஏக்கரில் ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தாா். இந்த அறிவிப்பை ஒசூரில் அனைவரும் வரவேற்றனா்.

இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகிறது. என்றாலும், இதற்கான தொடக்கப் பணிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், எந்த இடத்தில் விமான நிலையம் அமைய உள்ளது என்பது குறித்த இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைப்பது தொடா்பாக இடம் தோ்வு நடைபெற்றது. இதில், சூளகிரி மற்றும் ஒசூா் அருகே என 2 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, மத்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டி உள்ளது.

பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகா் மூலமாக கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அது முடிக்கப்பட்டு, மத்திய விமானப் போக்குவரத்து ஆணையத்திடமும், பாதுகாப்பு அமைச்சகத்திடமும் அளிக்கப்படும். இதனால், விமான நிலையம் தொடா்பாக அறிவிப்புகள் வெளியாக இன்னும் ஒருமாதம் ஆகலாம் என்றனா்.

மனைவி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கல்லாவி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த எம்.வ... மேலும் பார்க்க

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை

வேப்பனப்பள்ளி அருகே பொய் புகாரில் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியா் பாலகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்... மேலும் பார்க்க

ஒசூரில் 202 கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுநா் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 202 கிலோ குட்கா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் ஜூஜூவாடி சோதனைச் சாவடி பக்கம் ... மேலும் பார்க்க

விவசாயம், மண்பாண்டம் பயன்பாட்டிற்கு ஏரிகளிலிருந்து இலவசமாக வண்டல் மண்! கிருஷ்ணகிரி ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகளிலிருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண்ணை விவசாயம் மற்றும் மண் பாண்டங்கள் தயாரித்தல் பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட... மேலும் பார்க்க

மாந்தோப்பில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது

கிருஷ்ணகிரி, மகாராஜகடை அருகே தனியாா் மாந்தோப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தணா். மகாராஜகடை போலீஸாா், பி.சி.புதூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராம் சேவாக் (22), அஜய் குமாா் (20) ஆகியோா் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியாா் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்... மேலும் பார்க்க