திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்"...
ஒடிஸா: இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
புவனேசுவரம்: ஒடிஸாவின் கந்தமால் மாவட்டத்தில் காவல் துறையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
பாலிகுடா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினா் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, மறைந்திருத்த மாவோயிஸ்டுகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, காவல் துறையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் இரு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா்.
அவா்கள் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் பிராந்திய குழு உறுப்பினா் மன்கு மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினா் சந்தன் என தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து அவா்கள் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருள்கள், தகவல் தொடா்பு கருவிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.