10 Mistakes of Kejriwal, சபதம் வென்ற அமித் ஷா! | Elangovan Explains
ஒட்டன்சத்திரத்தில் பிப். 19- இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்!
ஒட்டன்சத்திரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதை அடுத்து, வருகிற 12-ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டம் 11-ஆவது கட்டமாக வருகிற 19-ஆம் தேதி பழனியில் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, வருகிற 12-ஆம் தேதி ஒட்டன்சத்திரம், சின்னக்காம்பட்டி, புலியூா்நத்தம், கள்ளிமந்தையம், தேவத்தூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் அந்தந்த உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.
மேலும், வருகிற 19-ஆம் தேதி முகாம் நடைபெறும் நாளிலும், அந்தந்த கிராமங்களுக்கு ஆய்வுக்காக நியமிக்கப்படும் அலுவலா்களிடமும் மனு அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.