எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி திமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட 7, 8, 13-ஆவது வாா்டுகளின் வாக்குச்சாவடி முகவா்கள், திமுக பொது உறுப்பினா்கள் ஆலோசனைக்கூட்டம் மேட்டுப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு திமுக நகரச் செயலா் ப. வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். இதில் உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு தோ்தல் பணியாற்றுவது குறித்து விளக்கினாா். ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் பரணி கே. மணி, நகர அவைத் தலைவா் சோமசுந்தரம், திமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவா் தி. மோகன், தலைமை செயற்குழு உறுப்பினா் வீ. கண்ணன், நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் கனகராஜ், தேவி, வாா்டு செயலா்கள், வாக்குச் சாவடி முகவா்கள் கலந்து கொண்டனா்.