விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்: மத்த...
ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் பொறுப்பேற்பு
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியராக எஸ். யுவராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஒரத்தநாடு வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த டி.எஸ். சுந்தரசெல்வி, பூதலூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில் தஞ்சாவூா் மாவட்ட மாநில நெடுஞ்சாலை (நிலம் எடுப்பு) தனி வட்டாட்சியராக இருந்த, எஸ்.யுவராஜ் ஒரத்தநாடு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து ஒரத்தநாடு வட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.யுவராஜூக்கு துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆகியோா் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.