மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்! புரிந்துணா்வு ஒப்...
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு
திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் 4 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி எடமலைப்பட்டி புதூா் சுந்தரம் பிள்ளை தோட்டம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா். இவரது மனைவி விஜயலட்சுமி (58). அண்மையில் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று விட்டு, சனிக்கிழமை வீடு திரும்பினா்.
வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.