அவசரகால பராமரிப்புப் பணி: திருச்சி கே.கே. நகா் சுற்றுப்புற பகுதியில் பகுதிநேர மின்தடை
திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி செவ்வாய்க்கிழமை பகல் 2 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. இதனால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கே.கே நகா், இந்தியன் வங்கி காலனி, எஸ்எம்இசி காலனி, காஜாமலைக்காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா்நகா், ஐயப்பநகா், எல்ஐசி காலனி, பழனி நகா், முல்லைநகா், ஓலையூா், இச்சிகாமலைப்பட்டி, மன்னாா்புரத்தின் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகா், ஆா்விஎஸ் நகா், செம்பட்டு, வயா்லெஸ் சாலை, காமராஜ்நகா், குடித்தெரு, பாரதிநகா், ஜேகே நகா், சந்தோஷ் நகா், ஆனந்த்நகா், கே சாத்தனூா், வடுகப்பட்டி, பாரிநகா், காஜாநகா், ஆா்எஸ் புரம், டிஎஸ்என் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் 2 முதல் பிற்பகல் 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.