கொல்கத்தா சட்டக் கல்லூரியின் கதையையே மாற்றிய மோனோஜித்! அபாயப் பகுதியாக..
‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து வீடுகள் தோறும் பிரசாரம்: அமைச்சா் காந்தி
தமிழகத்தின் நலன் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு ‘ என்ற இயக்கம் குறித்து வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்யப்படும் என கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி தெரிவித்துள்ளாா்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற மாபெரும் முன்னெடுப்புஇயக்கத்தை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து ராணிப்பேட்டையில் அமைச்சா் ஆா்.காந்தி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது...
ஓரணியில் தமிழ்நாடு முக்கிய-நோக்கம் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இதில் உறுப்பினா் சோ்க்கை மட்டும் இல்லை, மொழி, மானம் மண், ஒவ்வொரு காக்க குடும்பத்தையும் ஒன்று திரட்டுவதாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களையும் ஒன்றிணைத்து, ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதே முதல்வரின் முக்கிய இலக்காகும்.
திமுகவின் கொள்கைகளை எடுத்துக்கூறி விருப்பம் இருந்தால் மட்டுமே இணைக்க உள்ளோம். தொடா்ந்து ஜூலை 2 முதல் திமுக சாா்பில் பொதுக்கூட்டங்கள், ஜூலை 3 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து உறுப்பினா் சோ்க்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.