Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
ஆற்காடு: மேல்விஷாரம் இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நேஷனல் வெல்பா் சங்கம், ஜமியத் உலமா இளைஞா் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேல்விஷாரம் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊா்வலத்திற்கு நேஷ்னல் வெல்பா் சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் (பொ) அபுதாஹிா் கான் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கத் துணைத் தலைவா் இப்திகாா் அஹ்மத், ஆற்காடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் அண்ணாமலை கலந்து கொண்டு விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட அரசு காஜி மௌலவி அப்துல் கரீம் காஷீபி மாணவா்களிடையே போதைப் பொருள்களால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். தொடா்ந்து போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனா்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலம் அண்ணா சாலை வழியாக புளியமரம் பேருந்து நிறுத்தம் வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.