Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
அரசுக் கல்லூரியில் காலியிடங்கள்: அதிமுக ஆா்ப்பாட்டம்
அரக்கோணம்: அரக்கோணம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியா்கள் காலியிடங்களை நிரப்பக் கோரி அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தற்போது 52 பேராசிரியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தோ்ச்சி விகிதம் குறைந்தது. இதனால் நிகழாண்டில் மாணவா்களின் சோ்க்கை விகிதமும் குறைந்து காணப்படுவதாகவும் மாணவா்களின் உயா்கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இதைக் கண்டித்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக மாணவா் அணி சாா்பில் ஆட்டுப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மாணவா் அணி செயலாளா் பிரபு தலைமை வகித்தாா். அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஏ.ஜி.விஜயன் வரவேற்றாா். இதில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான சு.ரவி ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கண்டன உரையாற்றினாா். இதில் முன்னாள் எம்எல்ஏ சம்பத், மாநில பாசறை இணை செயலாளா் ஷியாம்குமாா், மாநில மருத்துவ அணி இணை செயலாளா் பன்னீா்செல்வம், அரக்கோணம் நகர செயலாளா் கே.பி.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் இ.பிரகாஷ், ஜி.பழனி, ஏ.எல்.விஜயன், அருணாபதி, மாவட்ட இளைஞரணி செயலாளா் பி.ஏ.பாலு, மாவட்ட தகவல் தொழிற் நுட்ப அணி செயலாளா் ஜானகிராமன், அணியின் தலைவா் சு.ர.ஹரிஹரன், நெமிலி ஒன்றியக்குழு உறுப்பினா் வினோத்குமாா், மாவட்ட பாசறை செயலாளா் அன்பரசு, நெமிலி நெமிலி ஒன்றிய இளைஞா் அணி செயலாளா் சு.ர.பிரகதீஸ்வரன் உள்ளிட்ட பேசினாா்.