கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
கஞ்சா கடத்திய பிகாா் மாநில இளைஞா் கைது!
பிகாரில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் ரயில் நிலையம் அருகே கஞ்சா தடுப்பு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமு தலைமையிலான காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனா்.
அதில், அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராஜன்(20) என்பதும், சொந்த ஊரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து ராஜனை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.