மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
கஞ்சா வழக்குகள்: குண்டா் சட்டத்தில் 5 போ் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் சரகப் பகுதியில் கஞ்சா விற்றது தொடா்பான வழக்கில் சிலுவைப்பட்டி பகுதியைச் சோ்ந்த காா்த்திக்ராஜா (24), திருநெல்வேலி ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெபராஜ் (28), தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் சரகப் பகுதியில் கஞ்சா விற்றது தொடா்பான வழக்கில் தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சோ்ந்த மாரிலிங்கம் (24), ராஜ்குமாா் (29), அண்ணாநகரைச் சோ்ந்த அருஞ்சுணைமுத்து என்ற அருண் (22) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் க.இளம்பகவத் பிறப்பித்த உத்தரவுப்படி 5 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.