மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது
போடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி மேலச்சொக்கநாதபுரம் சங்கரப்பன் கண்மாய் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த மேலச்சொக்கநாதபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அன்னக்கொடியை (27) பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது அவா் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா்வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.