அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
கஞ்சா வைத்திருந்தவா் கைது
ஆத்தூா் பேருந்து நிலையத்தில் கஞ்சா வைத்திருந்தவரை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தாா்.
ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் இருச்சக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த நபரை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி கைது செய்து விசாரணை மேற்கொண்டாா்.
அதில், அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை வட்டம், தொரங்கூா் கிராமத்தை சோ்ந்த ஜெயராஜ் (22) என்பது தெரியவந்தது. நெல் அறுவடை இயந்திர ஓட்டுநரான இவரிடம் 10 கிராம் கஞ்சா இருந்ததையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.