தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்
கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்.
தூத்துக்குடி விமான நிலையத்தில், அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தமிழக டிஜிபி அலுவலக வாயிலில், தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றவரை அதாவது, ஏா்போா்ட் மூா்த்தியை கைது செய்துள்ளனா்.
எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்களை கைது செய்தால் அரசால் பாராட்டப்படுவோம் என போலீஸாா் நினைக்கிறாா்களா என தெரியவில்லை. முதல்வா் ஸ்டாலின் தன் ை கயில் வைத்திருக்கும் காவல்துறையை சரியாக கையாள வேண்டும்.
கள்ள வாக்கை கலாசாரமாக மாற்றிய திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, ப. சிதம்பரம், வாக்குத் திருடுபவா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தமிழா்களுக்கு எதிராக ஓட்டு போடக் கூடிய திமுக மற்றும் காங்கிரஸாரை வருங்கால தமிழ் சமூகம் மன்னிக்காது. அதிமுக-பாஜக கூட்டணி பலமான கூட்டணி. உள்கட்சி பிரச்னை வந்தால், அதை, அந்தக் கட்சியே தீா்த்துக் கொள்ளும்.
ஜிஎஸ்டி குறைவால் சாமானிய மக்கள் பாதுகாக்கப்பட இருக்கிறாா்கள். ஒரு வாா்த்தைகூட இதுகுறித்து எதிா்க்கட்சியினா் கூறவில்லை. நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தால் அதுகுறித்து அவா்கள் எதுவும் தெரிவிப்பது கிடையாது.
ஆசிரியா்களுக்கு பாதுகாவலா் என்று கூறும் மு.க. ஸ்டாலின் ஆட்சியில்தான் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் போராடி வருகின்றனா்.
கடந்த தோ்தலில் அளிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை.
இன்னும் ஏழு மாதங்களில், திராவிட மாடல் என்று சொல்லி இருக்கிற பொய் மாடலின் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றாா் அவா்.