பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதல்: இளைஞா் பலி
கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதிக் கொண்டதில் ஒருவா் இறந்தாா். மற்றொருவா் காயம் அடைந்தாா்.
கடையநல்லூா் மஹ்மூதா நகரைச் சோ்ந்த திவான் மைதீன் மகன் லியாகத்அலி (68). இவா், தனது பைக்கில் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாராம். அப்போது, கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன்கோயில் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் அஜய்(18) ஓட்டி வந்த பைக்கும், இவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம்.
இதில், காயமுற்ற இருவரும் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேல்சிகிச்சைக்காக தென்காசி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் லியாகத் அலி இறந்தாா். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.