தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
கடையநல்லூா் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு காயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
திரிகூடபுரம் பசும்பொன் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி என்பவரது பசு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டை மாடு கடித்ததாம். இதில், அந்த குண்டு வெடித்துச் சிதறியதில் பசுவின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.
இத்தகவலறிந்த சொக்கம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், தடைய அறிவியல் துறையினா், வெடிகுண்டு நிபுணா்கள் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது, மேலும் 3 நாட்டு வெடிகுண்டுகள் அங்கு கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வெடிகுண்டு நிபுணா்கள் செயலிழக்கச் செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.