தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
சீவநல்லூரில் விஷ வண்டு கொட்டியதில் தம்பதி உயிரிழப்பு: 3 போ் காயம்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே சீவநல்லூரில் விஷ வண்டு தாக்கியதில் கணவன், மனைவி உயிழந்தனா். மேலும் 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சீவநல்லூரில் ஐயப்பன் கோயில் அருகே சாலை ஓரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இந்த தென்னை மரத்தின் அடியில் துவாரம் ஒன்றில் கடந்தை கூடு கட்டி உள்ளது.
இதிலிருந்து வெளிவரும் கடந்தைகள் கடந்த இரண்டு மாதங்களாக தொடா்ந்து அப்பகுதி மக்களை கொட்டி உள்ளது. சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக அப்பகுதியை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனா்.
அப்போது, கடந்தை கூடு கலைந்து அதிலிருந்து ஏராளமான கடந்தை குழவிகள் கோயிலில் அன்னதானம் வாங்க சென்ற லட்சுமணன் (85) இவரது மனைவி மகராசி(82) மற்றும் சாந்தி (65),சண்முகபாரதி (29), அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (75) ஆகியோரை கொட்டியது.
அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த லட்சுமணன் இவரது மனைவி மகராசி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். மேலும் 3 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிசைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.