கடையநல்லூரில் ஆக. 6இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: எம்எல்ஏ ஆய்வு
கடையநல்லூரில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ள இடத்தை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட கடையநல்லூா், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் ‘மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்‘ பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 6ஆம் தேதி மேற்கொள்கிறாா்.
இதையொட்டி கடையநல்லூரில் அவா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்த பகுதியை கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பாா்வையிட்டாா்.
மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் கிட்டுராஜா, கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே.முருகன், துணைச் செயலா் அழகா்சாமி, அதிமுக நிா்வாகிகள் தளவாய் சுந்தரம், புகழேந்தி , கருப்பையாதாஸ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.