தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
குற்றாலம் பேரருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சனிக்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சனிக்கிழமை சிற்றருவியைத் தவிர பிற அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து, குற்றாலம் பேரருவியைத் தவிர, மற்ற அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
குற்றாலம் பேரருவியில் 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பேரருரவியைத் தவிர பிற அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
திங்கள்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரலும், குளிா்ந்த காற்றும் வீசியது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.
