TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
கட்டாரிமங்கலம் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் சிறப்பு பூஜை
சாத்தான்குளத்தை அடுத்த கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகியகூத்தா் கோயிலில் ஆனி (உத்திரம்) திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, காலையில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல், மதியம் அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. காலைமுதல் ஸ்ரீஅழகியகூத்தா் அருட்பணி மன்றத்தினரின் பன்னிரு திருமுறை விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜபிள்ளை தலைமையில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.