தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
கட்டுமானப் பொருள்களின் விலை திடீரென உயா்த்தப்பட்டதாக புகாா்
கிரஷா்களின் எம். சாண்ட், பி. சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் விலையை திடீரென எந்த முன்னறிவிப்பின்றி இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளதாகவும், பழைய விலையிலேயே அவை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டடப் பொறியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மு. அருணாவிடம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு கட்டடப் பொறியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை அளித்த மனுக்கள் விவரம்:
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிரஷா்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எம். சாண்ட், பி. சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களின் விலையை கடந்த பிப். 15 முதல் எந்த முன்னறிவிப்பும் இன்றி கிரஷா் உரிமையாளா்கள் உயா்த்தியுள்ளனா்.
ஒப்பந்த அடிப்படையில் தனியாா் கட்டடங்களைக் கட்டிக் கொடுக்கும் பணியிலுள்ள கட்டடப் பொறியாளா்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. மேலும், கட்டடம் கட்டி வரும் பொதுமக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா், கிரஷா் உரிமையாளா்கள் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகிகளை அழைத்துப் பேசி, விலை ஏற்றத்தை முற்றிலுமாக நீக்கி பழைய விலையிலேயே அனைத்துவித கிரஷா் பொருள்களும் கிடைக்கச் செய்ய வேண்டும்.