சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியு...
கணக்கில் வராத பண விவகாரத்தில் ஆர்டிஓ உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு
திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (ஆா்டிஓ) உள்ளிட்ட 4 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி பிராட்டியூரில் உள்ள திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், கணக்கில் வராத ரூ. 1,06,000 பணத்தை பறிமுதல் செய்தனா். விசாரணையில் இந்தப் பணத்தை இடைத்தரகா்கள் சேதுராஜ், ரமேஷ் ஆகியோா் அதிகாரிகளுக்காக லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நடராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா, இடைத்தரகா்கள் சேதுராஜ், ரமேஷ் ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், ஊழல் தடுப்புப் போலீஸாா் தங்களது விசாரணை அறிக்கையை சென்னை போக்குவரத்து ஆணையருக்கு புதன்கிழமை அனுப்பினா். தொடா்ந்து, சம்பந்தப்பட்ட 2 அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிய வருகிறது.