ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 3 நாள் ஓணம் திருவிழா
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் செப். 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
முதல் நாளான 4-ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி பச்சை நிறப்பட்டும், 5-ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டும், 6-ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிறப்பட்டும் பகவதியம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த மூன்று நாள்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிா், இளநீா், பன்னீா், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிா்தம், புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அபிஷேகத்தைத் தொடா்ந்து பகல் 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்கக் கவசம் ஆகியவை அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடிபட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஜான்சிராணி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் ஆனந்தன், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.