கபிலா்மலை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி சுற்றுலா
கபிலா்மலை வட்டார வேளாண்மைத் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின்கீழ், கபிலா்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், இயற்கை விவசாயம் குறித்த கல்வி சுற்றுலாவுக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனா்.
இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பட்டறிவு பயணமாக திருப்பூா் மாவட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் மணி என்பவரின் இயற்கை விவசாய தோட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு இயற்கை விவசாயி மணி மற்றும் கபிலா்மலை வட்டார முன்னோடி இயற்கை விவசாயி லோகநாதன் ஆகியோா் இயற்கை விவசாயம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த கல்வி சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை கபிலா்மலை வட்டார வேளாண்மை துணை அலுவலா் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா். கல்வி சுற்றுலாவில் மாணவ, மாணவிகளுடன் தலைமை ஆசிரியா் மு.பூவராகவன், உதவி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகளும் கலந்துகொண்டனா்.