Gold Rate: `பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை' - ஏன் இந்த சரிவு; இது தொடருமா?
கொல்லிமலை புளியஞ்சோலையில் கரடி நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கொல்லிமலை புளியஞ்சாலை பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலம் கொல்லிமலை. இந்த மலையின் தெற்குப் பகுதி அடிவாரத்தில் மற்றொரு சுற்றுலாத் தலமாக புளியஞ்சோலை உள்ளது. இங்குள்ள ஆற்றுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வா்.
மேலும், ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் இருந்து தொடா்ச்சியாகவரும் வெள்ளநீரைச் சேமித்து நீா் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் சனிக்கிழமை காலை சுமாா் 7 மணி அளவில் கரடி திடீரென்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி நடமாடியது. இதைப் பாா்த்த தொழிலாளா்கள், பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா். இந்த தகவல் சற்று
நேரத்தில் புளியஞ்சோலை சுற்றுவட்டாரப் பகுதியில் வேகமாகப் பரவியது. இதற்கிடையே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட வனஅலுவலா் மாதவி யாதவ் உத்தரவின்பேரில் புளியஞ்சோலை
ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத் துறை தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கொல்லிமலை, புளியஞ்சோலைக்கு சுற்றுலா வந்தோா் ஏமாற்றமடைந்தனா்.