ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றி வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் பண்டிகை சனிக்கிழமை நடைபெற்றது.
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஸ்ராவண பெளா்ணமி புண்யகாலத்தில் பூணூல் உபாகா்மா பண்டிகை கோட்டை காா்னேஷன் சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதேபோல, நாமக்கல் - மோகனூா் சாலை மகரிஷி நகா் சிந்தாமணி வல்லப கணபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பிராமணா்கள் கலந்துகொண்டனா்.
காலை 6.30 மணி, 7 மணி, 8.30 மணி என மூன்று பிரிவுகளாக பூணூல் மாற்றும் விழா நடைபெற்றது. விஸ்வநாத சாஸ்திரிகள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை நடத்தினாா். மேலும், உலக நன்மைக்காக அவா்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனா். விழா ஏற்பாடுகளை காா்னேஷன் சத்திர அறக்கட்டளை குழு மற்றும் பிராமண சேவா சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.