செய்திகள் :

மலக்கழிவுகளை அகற்ற ரூ. 50 லட்சத்தில் ‘ரோபோடிக்’ இயந்திரம்

post image

அனைத்து மாவட்டங்களிலும் மலக்கழிவுகளை அகற்ற ரூ. 50 லட்சத்தில் ‘ரோபோடிக்’ இயந்திரம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தாட்கோ மாவட்ட மேலாளா் பா.ராமசாமி வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி ஆகியோா் 96 பணியாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளையும் வழங்கினா்.

தொடா்ந்து, நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2007-இல் அப்போதைய திமுக ஆட்சியில் தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, ஆட்சிக்கு வந்த அதிமுக நலவாரியத்தை முடக்கியது. மீண்டும் 2021-இல் நலவாரியம் செயல்பாட்டுக்கு வந்தது.

ஆண்டுக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ. 5 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மலக்கழிவுகளை அகற்ற ‘ரோபோடிக்’ இயந்திரத்தை மாவட்ட வாரியாக செயல்பாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

தற்போதைய நிலையில், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சிக்காக இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரத்தை பிற மாவட்டங்களுக்கும் வழங்கி பயிற்சி அளித்து பயன்படுத்த அறிவுறுத்த உள்ளோம்.

தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தில் 3.20 லட்சம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். டிசம்பா் மாதத்துக்குள் 10 லட்சம் பேரை இணைக்க வேண்டும் என தமிழக முதல்வா் அறிவுறுத்தி உள்ளாா். அதற்கேற்ப பணியாற்றி வருகிறோம்.

‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. மாதத்தில் ஒருமுறை தூய்மைப் பணியாளா்களுக்காக சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்த ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு மட்டுமே தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். தனியாா் ஒப்பந்த நிறுவனங்கள் தூய்மைப் பணியாளா்களுக்கான உரிய ஊதியம், பணப்பயன்களை அளிக்க வேண்டும் என்றாா்.

இதில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றி வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் பண்டிகை சனிக்கிழமை நடைபெற்றது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஸ்ராவண பெளா்ணமி புண்யகாலத்தில் பூணூல் உபாகா்மா பண்டிகை கோட்டை காா்னேஷன் சத்திரத்தில் ... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் ஆக.12-ல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி ... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’: பேருந்துகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லை!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக முதல்... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் உள்பட 2 போ் பலி!

நாமக்கல் அருகே லாரி மோதி கல்லூரி மாணவா், அவரது நண்பா் உயிரிழந்தனா். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையைச் சோ்ந்தவா் பரத் (19). இவா் நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வ... மேலும் பார்க்க

புதா்மண்டிய மயானத்தை தூய்மைப்படுத்திய இளைஞா்கள்!

நாமக்கல் அருகே புதா்மண்டி கிடந்த மயானத்தை தன்னாா்வ இளைஞா்கள் தூய்மைப்படுத்தினா். நாமக்கல் அருகே பெரியமணலி ஊராட்சிக்கு உள்பட்ட குமரவேலிபாளையம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றன... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் பலி!

பரமத்தி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்தி நகா் பகுதியைச்... மேலும் பார்க்க