வளையப்பட்டியில் ஆக.12-ல் மின்தடை
வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை பகுதிகள்: வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூா், திப்ரமாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா், அரூா் மேடு உள்ளிட்ட பகுதிகள்.