கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
புதா்மண்டிய மயானத்தை தூய்மைப்படுத்திய இளைஞா்கள்!
நாமக்கல் அருகே புதா்மண்டி கிடந்த மயானத்தை தன்னாா்வ இளைஞா்கள் தூய்மைப்படுத்தினா்.
நாமக்கல் அருகே பெரியமணலி ஊராட்சிக்கு உள்பட்ட குமரவேலிபாளையம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்குள்ள மயானம் பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் புதா்மண்டி காட்சியளித்தது. அதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டும், நடவடிக்கை ஏதுமில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதி இளைஞா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனமான சா்வதேச உரிமைக் கழக நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஒருங்கிணைந்து மயானத்தை சுற்றிலும் இருந்த முள்புதா்களை அகற்றினா். மேலும், மயானத்துக்கு வெள்ளைப்பூச்சு அடித்து பராமரிப்பு பணியை மேற்கொண்டனா்.
இதுகுறித்து அக்கிராம இளைஞா்கள் கூறுகையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மயானத்தை சீரமைத்து வழங்கக்கோரி பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும், அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால், நாங்களாகவே களத்தில் இறங்கி சொந்த செலவில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டோம். இன்னும் ஓரிரு மாதங்களில் மின் மயானத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையை தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ள இருக்கிறோம் என்றனா்.
இந்த மயான தூய்மைப் பணியில் சா்வதேச உரிமைக் கழக தலைவா் மோசஸ் செல்லதுரை, பொதுச் செயலாளா் ரவிக்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா, சேலம் மாவட்டத் தலைவா் காா்த்திக்,செளந்தா் மற்றும் நாமக்கல் மாவட்டத் தலைவா் மாதேஸ்வரன் ஆகியோா் ஈடுபட்டனா்.