சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் பலி!
பரமத்தி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் (80). இவா் பரமத்தி வேலூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு செல்வதாக தனது மகன் செந்திலிடம் வெள்ளிக்கிழமை கூறி சென்றாா். இரவுவரை வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த செந்தில், வேலூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு தொடா்புகொண்டு கேட்டுள்ளாா். அவா்கள் வரவில்லை என தெரிவித்ததையடுத்து, தந்தையை பல்வேறு இடங்களில் தேடினாா்.
இந்நிலையில், பரமத்தி அருகே ஓவியம்பாளையம், திருமணிமுத்தாறு பாலம் அருகே அடையாளம் தெரியாத முதியவா் ஒருவா் வாகனம் மோதி இறந்த நிலையில், அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக செந்திலுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செந்தில் சென்று பாா்த்தபோது உயிரிழந்தது நடேசன் என்பது தெரியவந்தது.
புகாரின் பேரில் பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடேசன் மீது மோதிவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.