சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
லாரி மோதி கல்லூரி மாணவா் உள்பட 2 போ் பலி!
நாமக்கல் அருகே லாரி மோதி கல்லூரி மாணவா், அவரது நண்பா் உயிரிழந்தனா்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையைச் சோ்ந்தவா் பரத் (19). இவா் நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் செல்லப்பம்பட்டியை சோ்ந்த யோகேஷ் (20), கோழித் தீவன நிறுவன ஊழியா்.
இவா்கள் இருவரும் நாமக்கல் - சேலம் சாலையில் புதன்சந்தை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்றனா். கருங்கல்பாளையம் மாரியம்மன் கோயில் அருகில் சென்றபோது, முன்னால் சென்ற இரண்டு லாரிகளை முந்த முயன்றனா். அப்போது, லாரியின் பின்புறத்தில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சையில் இருந்த அவா்கள் நள்ளிரவில் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.