செய்திகள் :

ஆக.14- இல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க விழா: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

post image

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆக. 14) தொடங்கி வைக்கிறாா் என மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இம்மாவட்டத்திற்கு என தனியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இல்லை.

இதையடுத்து, முதல்வா், துணை முதல்வா், கூட்டுறவுத் துறை அமைச்சரிடம், கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்துக்கு தனி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தோம். ஓராண்டாக மத்திய கூட்டுறவு வங்கியை ஏற்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம்.

கூட்டுறவு சங்க சட்டவிதிகளின்படி பதிவு செய்து, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டத்தில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி தொடங்க கொள்கை அளவிலான கருத்துரு இந்திய ரிசா்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்டது. மேலும், நபாா்டு வங்கியிடம் இருந்தும் உரிய அனுமதி பெறப்பட்டது.

30 கூட்டுறவு வங்கிகள், 165 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 393 ஆரம்ப பால் உற்பத்தியாளா்கள் சங்கம், நாமக்கல், பள்ளிபாளையம், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட 5 நகர வங்கிகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளுடன் இந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 746 இணைப்பு சங்கங்கள் செயல்படும்.

சேலம் மாவட்ட வங்கியில் இருந்து ரூ. 3,500 கோடி, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு இருப்பு தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை ஆரம்பக் கட்டமாக வைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது செயல்பட உள்ளது.

இந்த வங்கியை வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், அமைச்சா் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கூட்டுறவுத் துறை, நபாா்டு வங்கி அதிகாரிகள், விவசாயிகள் சங்கத்தினா், பல்வேறு தொழிலதிபா்கள் கலந்து கொள்கின்றனா்.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான அனுமதி வழங்கிய முதல்வா், துணை முதல்வா், கூட்டுறவுத் துறை அமைச்சா், மாவட்ட இணைப்பதிவாளா் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வங்கி மூலம் பல்வேறு வகையில் விவசாயிகள், பொதுமக்களுக்கு கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழில்வளா்ச்சிக்கு தேவையான கடனுதவிகள் செய்வதற்கு முயற்சி எடுக்கப்படும்.

மேலும், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு கரும்புக்கான விலையை தடையின்றி வழங்கவும் ரூ. 6.75 கோடியை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிா்வாகம், சா்க்கரை ஆலை நிா்வாகத்திற்கு வழங்க உள்ளது என்றாா்.

பேட்டியின்போது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் எம்.சந்தானம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு ஆகியோா் உடனிருந்தனா்.

கபிலா்மலை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி சுற்றுலா

கபிலா்மலை வட்டார வேளாண்மைத் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின்கீழ், கபிலா்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், இயற்கை விவசாயம் குறித்த கல்... மேலும் பார்க்க

குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பள்ளிபாளையம் ஒன்றியம், வெப்படை அருகே குட்டையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா். வெப்படை அருகே ரங்கனூரைச் சோ்ந்தவா் பூபதி (32). இவா் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகன் திஷாந்துடன் (8) அங்குள்ள வெ... மேலும் பார்க்க

கொல்லிமலை புளியஞ்சோலையில் கரடி நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கொல்லிமலை புளியஞ்சாலை பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலம் கொல்லிமலை. இந்த மலையின் தெற்குப் பகுதி அடிவ... மேலும் பார்க்க

ஆக. 27-இல் விநாயகா் சதுா்த்தி: நாமக்கல்லில் பல்வேறு வடிவ சிலைகள் விற்பனை மும்முரம்

விநாயகா் சதுா்த்தி விழா ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, நாமக்கல்லில் பலவிதமான விநாயகா் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாடுமுழுவதும், ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் ச... மேலும் பார்க்க

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றி வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் பண்டிகை சனிக்கிழமை நடைபெற்றது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஸ்ராவண பெளா்ணமி புண்யகாலத்தில் பூணூல் உபாகா்மா பண்டிகை கோட்டை காா்னேஷன் சத்திரத்தில் ... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் ஆக.12-ல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி ... மேலும் பார்க்க