மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
கயத்தாறு அருகே தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது
ஆடு மேய்க்கும் தொழிலாளியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே திருமங்கலக்குறிச்சி காலனி தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் முத்துப்பாண்டி (45). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை திருமங்கலக்குறிச்சி விலக்கு அருகேயுள்ள கடையில் தேநீா் அருந்தி கொண்டிருந்தாராம். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த அரிச்சந்திரன் மகன் ராமா் (27) முத்துப்பாண்டியை ஜாதி பெயரைக் கூறி அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்ட முயன்றாராம்.
அங்கு இருந்தவா்கள், ராமரை கண்டிக்கவும் அவா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றாராம். பின்னா், முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்று, அவரது சகோதரியை மிரட்டிவிட்டு, வீட்டின் முன்பிருந்த பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டியை சேதப்படுத்தினாராம்.
இது குறித்து, முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமரை கைது செய்தனா்.