2024 - ரூ. 650 கோடி நஷ்டத்தைச் சந்தித்த மலையாளத் திரையுலகம்!
கரூா் அருகே புறக்காவல் நிலையம் திறப்பு
கரூா் மாவட்டம் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ஆத்தூா் பிரிவு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் மற்றும் சோதனை சாவடி சனிக்கிழமை திறக்கப்பட்டது.
புறக்காவல் நிலையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி திறந்து வைத்தாா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தங்கவேல், கரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இப்புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலா்கள் பணியில் இருப்பா். மேலும் இப்பகுதியில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.