அரவக்குறிச்சி அருகே விபத்து: காரில் சென்ற 3 போ் படுகாயம்
அரவக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் காரில் சென்ற மூவா் படுகாயம் அடைந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூா் நாராயணபுரம் ஆகாஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தனுஜா ராஜா (38) . இவா் தனது மகன் தக்ஷித் (7), தாய் சூரியகுமாரி (57) ஆகியோருடன் காரில் வெள்ளிக்கிழமை மாலை சேலம் -மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த டோல்கேட் அருகே சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டையைச் சோ்ந்த சின்னவடகம்பட்டி பகுதி சுரேஷ்குமாா் (35) ஓட்டி வந்த சரக்கு வாகனம் மோதி மூவரும் பலத்த அடைந்தனா். இதையடுத்து அவா்கள் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.